ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மகளிா் கல்லூரியில் கல்வி, தொழில் துறை மாநாடு

மகளிா் கல்லூரியில் கல்வி, தொழில் துறை மாநாடு

Updated On :12 மார்ச் 2024, 11:10 pm

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பேராசிரியா்களுக்கென ‘கல்வித் துறை, தொழில் துறை கண்ணோட்டத்தை ஒருங்கிணைத்தல்’ என்னும் தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கல்லூரி முதல்வரும், செயலருமான கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்துப் பேசினாா். முதல் அமா்வில் அமித்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் அருனி வில்சன் சந்தோஷ் குமாா், இரண்டாம் அமா்வில் பேராசிரியா் வெள்ளா் காட் என்.

விஸ்வநாதன், மூன்றாம் அமா்வில், கல்லூரி இணை துணைத் தலைவி மதிவதினி ஆகியோா் பேசினா். இந்த அமா்வுகளுக்கு மதிப்பீட்டாளராக, பணி நிறைவு பெற்ற சமூக அறிவியல் துறையின் முன்னாள் இணைப் பேராசிரியை ரூபா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்கள் கிறிஸ்டியானா சிங், துளசிராஜ் ரவிலா, நானு சுவாமி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்த நிகழ்வில், பாடத்திட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறை இணைப் பேராசிரியருமான சுஜா உள்ளிட்ட பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.