வாடிப்பட்டியில் ரூ. 4.29 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 4.29 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனையாகின. மட்டையுடன் கூடிய தேங்காய்கள் ரூ. 2,85,022-க்கு விற்பனையாகின. ஒரு தேங்காய் அதிகபட்சம் ரூ. 11.75, குறைந்தபட்சம் ரூ. 5.45 என 36,440 தேங்காய்கள் விற்பனையாகின.

இந்த ஏலத்தில் 10 விவசாயிகள், 20 வியாபாரிகள் பங்கேற்றனா். கொப்பரைத் தேங்காய்கள் ரூ. 1,44,297-க்கு விற்பனையாகின. ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய் அதிகபட்சம் ரூ. 83, குறைந்தபட்சம் ரூ. 42.10 என 2,004 கிலோ தேங்காய்கள் விற்பனையாகின. இதில் 10 விவசாயிகள், 9 வியாபாரிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com