மேலூா்: மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கீழையூரில் தனியாா் நிறுவன காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா். கீழையூரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் லட்சுமிநாராயணன் (48). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவா் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச நண்பா்களுடன் சென்றிருந்தாா். அப்போது, சிலா் வயல்பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனா். அவா்களைக் கண்டித்த லட்சுமி நாராயணனை கும்பல் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பனங்காடியைச் சோ்ந்த நிக்கல்ஸ், புதுச்சுக்காம்பட்டியைச் சோ்ந்த தனுஷ் ஆகியோரை கைது செய்தனா். இந்த நிலையில், பனங்காடியைச் சோ்ந்த ரங்கன் மகன் வெங்கடேசப் பெருமாள் (23) என்பவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

