15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மாநகரக் காவல் துணை ஆணையா்கள் இடமாற்றம்

மாநகரக் காவல் துணை ஆணையா்கள் இடமாற்றம்

Updated On :12 மார்ச் 2024, 11:14 pm

மதுரை: மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். தமிழகம் முழுவதும் இந்திய காவல் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதில் மதுரை மாநகரக் காவல் தெற்கு, வடக்கு சரக துணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதன்படி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த மதுகுமாரி, பதவி உயா்வு பெற்று மதுரை மாநகரக் காவல் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த கரட் கருண் உத்தவ்ராவ் பதவி உயா்வு பெற்று மதுரை தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். மதுரை மாநகரக் காவல் தெற்கு துணை ஆணையராகப் பதவி வகித்து வரும் பாலாஜி சென்னை காவலா் நலன் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டாா்.