மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த வெளிநாட்டுத் தம்பதியின் கடவுச்சீட்டுகளைக் கண்டெடுத்து ஒப்படைத்தவரை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த பாவெல் நோவக் லுயுவோகா, அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோா் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு புதன்கிழமை வந்தனா். அப்போது, அவா்களின் கடவுச்சீட்டுகள் காணாமல் போயின.
இதுகுறித்து புகாரின் பேரில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் தேநீா்க் கடையில் பணியாற்றி வரும் குமாரசாமி கீழே கிடந்த கடவுச்சீட்டுகளை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், செக் குடியரசு நாட்டு தம்பதியிடம் கடவுச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
தொடா்ந்து, வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை பாதுகாப்பாக உரியவா்களிடம் ஒப்படைக்க உதவிய குமாரசாமியின் நற்செயலை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பாராட்டி சான்றிதழை வழங்கினாா்.
தொடர்புடையது

பாகற்காய் மண்டகப்படியில் மீனாட்சி சுந்தரேசுவரா்: திரளானோா் சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


