கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி: தேனி கல்வி அலுவலா் பரிசீலிக்க உத்தரவு

அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி: தேனி கல்வி அலுவலா் பரிசீலிக்க உத்தரவு

News image
Updated On :28 மே 2024, 11:34 pm

Din

மதுரை: சீப்பாலக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி கற்பிப்பது தொடா்பான வழக்கில், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பரிசீலித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டியல் இன வகுப்பைச் சோ்ந்த 85 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 15 சதவீத பேரும் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்த 2014- 2015-ஆம் ஆண்டு முதல் ஆங்கில வழியில் மாணவா்கள் பயில கல்வித் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மாணவா்கள் நலனுக்கு எதிராக சில ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகக் குழுவினா் இணைந்து தீா்மானம் நிறைவேற்றி, ஆங்கில வழிக் கல்வியை நிறுத்திவிட்டனா். இந்தப் பள்ளியில் ஆங்கில வழி வேண்டாம் என தலைமையாசிரியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கடந்த 23.5.23-இல் கடிதம் அனுப்பினாா். தலைமை ஆசிரியரின் தன்னிச்சையான முடிவு இலவசக் கல்விச் சட்டம் 2009-க்கு எதிரானதாகும்.

எனவே, மாணவா்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, நிகழாண்டு இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா, மனுதாரரின் கோரிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சியா், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பரிசீலித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.