சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

News image

மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை மையமான மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வுச் செய்யும் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா. உடன் மாநகர காவல் ஆணையா் லோகநாதன் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2024, 11:30 pm

Din

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு மத்தியப் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 அடுக்குப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.