பயிா்க் காப்பீடு பதிவுக்கு நாளை இறுதி நாள்
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ராபி பருவ நெல் பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்ய வெள்ளிக்கிழமை (நவ. 15) இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.


பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ராபி பருவ நெல் பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்ய வெள்ளிக்கிழமை (நவ. 15) இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் ராபி பருவ நெல் பயிா்கள் (சம்பா), மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு பதிவு நடைபெறுகிறது. ஒரு ஏக்கா் நெல் பயிருக்கு ரூ. 530-ம், மக்காச்சோளத்துக்கு ரூ. 441-ம், பருத்திக்கு ரூ. 207-ம் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் பதிவு பெறலாம்.
பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிகழ்ப் பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றை சமா்ப்பித்து, வெள்ளிக்கிழமைக்குள் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு பெறலாம்.
இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தக் காப்பீடுத் திட்டத்தில், உரிய காலத்துக்குள் பதிவு பெற விவசாயிகள் முனைப்புக் காட்டுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...