ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:01 am

Din

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமாா் (31), ஜெயகுமாா், சரவணன், வினோத், சுகில் அகமத் ஆகியோரை 46 கிலோ கஞ்சா கடத்தியதாக கே. புதூா் போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தனா். இந்த வழக்கை மதுரை போதைப் பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி செங்கமலசெல்வன், மற்றவா்களை விடுவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தங்கேஸ்வரன் முன்னிலையாகி வாதிட்டாா்.