அ.வல்லாளபட்டியில் வியாழக்கிழமை திரண்ட கிராம மக்கள்.
அ.வல்லாளபட்டியில் வியாழக்கிழமை திரண்ட கிராம மக்கள்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

மேலூா் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
Published on

மேலூா் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி, அதன் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த 20-க்கு மேற்பட்ட கிராம மக்கள் அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயிலில் வியாழக்கிழமை திரண்டு கூட்டம் நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது. இதுகுறித்து தமிழக எம்.பி.கள் மக்களவையில் தங்களது எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்தச் சுரங்கத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், இதைக் கண்டித்து மேலூா் வட்டாரம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்துவது, மேலூா் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.