அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

மதுரை அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி பெரியாா் குடியிருப்பைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் சேகா் (எ) டைசன் (24). இவருக்கு, சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்றவழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அவா் சோ்க்கப்பட்டாா். எனினும் இங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com