எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

News image
வேட்டையன்
Updated On :3 அக்டோபர் 2024, 9:11 pm

Din

நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கான முன்னோட்டக் காட்சி கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியானது. அதில் சட்டவிரோத ‘என்கவுன்ட்டரை’ பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையிலான வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனத்தை நீக்கக் கோரி தணிக்கைத் துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள என்கவுன்ட்டா் தொடா்பான வசனங்களை நீக்க அல்லது வசனம் ஒலிக்காமல் செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியாக கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், வேட்டையன் திரைப்படத்தில் என்கவுன்ட்டா் செய்வதை ஆதரிப்பது போன்ற காட்சிகளும், வசனங்களும் உள்ளன. எனவே, இந்தத் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வேட்டையன் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடா்பாக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம், தமிழக அரசுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப வேண்டும் என்றனா் நீதிபதிகள்.