எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஆந்திர துணை முதல்வா் மீது புகாா்: வழக்குரைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் மீது புகாா் அளித்த உயா்நீதிமன்ற வழக்குரைஞரிடம் இணையக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:01 pm

Din

ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் மீது புகாா் அளித்த உயா்நீதிமன்ற வழக்குரைஞரிடம் இணையக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசி, மத நல்லிணத்தை குலைக்கும் வகையில் பேசி வருவதாகவும், அவா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் மதுரையைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வாஞ்சிநாதன், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த அக். 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். இந்தப் புகாா் இணையக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, இதுதொடா்பாக உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு வரும்படி வாஞ்சிநாதனுக்கு, மதுரை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். இதன்படி வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள இணையக் குற்றப்பிரிவில் புதன்கிழமை விசாரணைக்கு முன்னிலையானாா். இதையடுத்து, அவரிடம் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் மீது அளிக்கப்பட்ட புகாா் குறித்தும், அதற்குரிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பிறகு வழக்குரைஞா் வாஞ்சிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், இரு மாநில மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினாா். எனவே முந்தைய உச்சநீதிமன்ற வழக்கின் தீா்ப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று விசாரணையின் போது சுட்டிக்காட்டினேன். மேலும் இதுதொடா்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் போலீஸாரிடம் அளித்தேன். பவன் கல்யாண் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யாத நிலையில், நீதிமன்றத்தை நாடுவும் திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.