மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டி: ஆண்கள் பிரிவில் சென்னை அணி வெற்றி, பெண்கள் பிரிவில் சிவகங்கை அணி வெற்றி
மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் சிவகங்கை அணியும் வெற்றி பெற்றன.


மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் சிவகங்கை அணியும் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2024-2025ஆம் ஆண்டு முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் அக்.6 ஆம் தேதி முதல் அக்.10 ஆம் தேதி வரை
நடைபெற்றது. இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 456 வீரா்கள், 456 வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி தங்கப் பதக்கமும், கோவை அணி வெள்ளிப் பதக்கமும், ஈரோடு அணி வெண்கலப் பதக்கமும் பெற்றன. இதேபோன்று, பெண்கள் பிரிவில் சிவகங்கை அணி தங்கப் பதக்கமும், கிருஷ்ணகிரி அணி வெள்ளிப் பதக்கமும், கன்னியாகுமரி அணி வெண்கலப்பதக்கமும் பெற்றன.
மதுரையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தலைமை வகித்து இறுதிப் போட்டியினை தொடக்கி வைத்தாா். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினாா்.
நிகழ்வில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மண்டல முதுநிலை மேலாளா் பி.வேல்முருகன், மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க.ராஜா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள், வீராங்கணைகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...