பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மாநில கோ-கோ போட்டி: சென்னை, சிவகங்கை அணிகள் முதலிடம்

மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் சிவகங்கை அணியும் முதலிடம் பிடித்தன.

News image
படவிளக்கம்- மதுரை குதிரை பந்தய சாலையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ இறுதிப் போட்டியை தொடக்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா.
Updated On :10 அக்டோபர் 2024, 10:05 pm

Din

மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் சிவகங்கை அணியும் முதலிடம் பிடித்தன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2024-2025 ஆம் ஆண்டு முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 456 வீரா்கள், 456 வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதன் இறுதிப் போட்டிகள் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தொடங்கிவைத்தாா்.

போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி தங்கப் பதக்கமும், கோவை அணி வெள்ளிப் பதக்கமும், ஈரோடு அணி வெண்கலப் பதக்கமும் பெற்றன.

இதேபோல, பெண்கள் பிரிவில் சிவகங்கை அணி தங்கப் பதக்கமும், கிருஷ்ணகிரி அணி வெள்ளிப் பதக்கமும், கன்னியாகுமரி அணி வெண்கலப் பதக்கமும் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் வழங்கினாா்.

நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளா் பி.வேல்முருகன், மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.