பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: வாடிப்பட்டி அரசுப் பள்ளியை உறவினா்கள் முற்றுகை

மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:04 pm

Din

மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா். இவரது மனைவி வீரம்மாள். இவா்களது மகள் ஆனந்தி (17). இவா் வாடிப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த இவா், திடீரென பள்ளியில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, ஆசிரியா்கள் அவரை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பள்ளி நிா்வாகத்தினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.