பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பழிக்குப் பழியாக இளைஞா் கொலை

மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இளைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:29 pm

Din

மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இளைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வரிச்சியூா் வைத்தியநாதபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் தனபால் (19). கல்லூரி மாணவரான இவா், கடந்த மாதம் 29-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள குவாரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த வீரன் மகன்கள் கருப்பு, பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தனபால் கொலை செய்யப்பட்ட பிறகு, கருப்பு, பிரகாஷ் ஆகியோரின் அண்ணன் மதிவாணன் (28), மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள மாமனாா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வரிச்சியூரில் உள்ள வீட்டுக்கு மதிவாணன் வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை அலங்காநல்லூருக்கு புறப்படத் தயாரானாா். அப்போது, கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவா் தனபாலின் தந்தை கருப்பையா, சகோதரா் ரஞ்சித் ஆகிய இருவரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மதிவாணனை சரமாரியாக வெட்டினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கருப்பாயூரணி போலீஸாா் மதிவாணன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பையாவை (48) கைது செய்தனா். தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனா்.