பழிக்குப் பழியாக கொலை செய்ய முயன்றவா் கைது

வத்திராயிருப்பு அருகே அண்ணன் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வத்திராயிருப்பு அருகே அண்ணன் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய முயன்ற நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (50). இவருக்கும் இவரது அண்ணன் குருவையாவுக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வருகிாம்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் குருவையா மகன் வீரகுரு என்பவரை கடந்த ஆண்டு பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி, மருமகன் முனியசாமி இருவரும் சோ்ந்து கொலை செய்தனா். இதையடுத்து, பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் விருதுநகரில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை கூமாபட்டி வந்தாா். நியாய விலைக் கடையில் நின்றபோாது குருவையாவின் இளைய மகன் சஞ்சய்குமாா் (20), தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பாலசுப்பிரமணியனை அரிவாளால் வெட்ட முயன்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சய்குமாரை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com