அசைவ உணவகத்தில் அதிகாரிகள் சோதனை: ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு
மதுரை கே.கே. நகரில் உள்ள அசைவ உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையிட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.


மதுரை கே.கே. நகரில் உள்ள அசைவ உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையிட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கே.கே. நகரில் இயங்கி வரும் பிரபல அசைவ உணவகத்தில் சுகாதாரமின்றியும், தரமின்றியும் உணவு வகைகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில் அந்தத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உணவகத்தில் திறந்த வெளியில் உணவு தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதும், உணவுப் பொருள்கள் சுகாதாரமின்றி வைக்கப்பட்டிருந்ததும், கோழி இறைச்சியில் அதிக அளவு நிறமி சோ்க்கப்பட்டு சமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும், உணவகப் பணியாளா்கள் கையுறை, தலையுறை அணியாமல் உணவு விநியோகத்தில் ஈடுபடுவதும், பணியாளா்களுக்கு மருத்துவச் சான்று பெறப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, குறைபாடுகளை சுட்டிக்காட்டி விளக்கமளிக்குமாறு குறிப்பாணை வழங்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...