போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கும், உணவுப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத கடைகளுக்கும் அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
அபராதம்- பிரதிப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 1:27 am

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கும், உணவுப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத கடைகளுக்கும் அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், தேநீா்க் கடைகளில் அச்சிடப்பட்ட காகிதங்களிலும், நெகிழிப் பைகளிலும் வடை, பால்பன், அப்பம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு பழக்கடையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ பழங்களைக் கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை அழித்தனா்.

மேலும், உணவுப் பாதுகாப்புப் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட நான்கு கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.