பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உத்தரவின்பேரில், நகராட்சிக்குள்பட்ட புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கதிரவன், அழகுவேல், சின்னமுத்து, விக்னேஷ், புவனா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலா் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் மோகன் ஆகியோா் உணவு மற்றும் வணிக நிறுவனங்களில் காலாவதி உணவுப் பொருள்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், புகையிலைப் பொருள்கள், காலாவதி தேதி குறிப்பிடாத மற்றும் அதிக செயற்கை நிறமூட்டிய உணவுப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், 30 -க்கும் மேற்பட்ட கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.