25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மதுரையில் வேனில் பயணம் செய்த செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:41 pm

Din

மதுரையில் வேனில் பயணம் செய்த செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண், தனியாா் வீட்டு செவிலியா் சேவை நிறுவனத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் தனது நிறுவன உரிமையாளா், ஊழியா்களுடன் கோயில் திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். விழா முடிந்து வேனில் வந்து கொண்டிருந்தாா். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வந்த போது, வேனில் வந்த முத்துக்குமாா் (44) என்பவா் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதைத் தட்டிக் கேட்ட செவிலியரை முத்துக்குமாா், வேன் ஓட்டுநா் ஆகிய இருவரும் தாக்கினாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவை மாவட்டம், பி.என்.புதூரைச் சோ்ந்த முத்துக்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.