பெண்ணிடம் ரூ. 31.28 லட்சம் மோசடி: சிறையிலிருப்பவா் மீண்டும் கைது
மதுரையில் வேலை தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.31.28 லட்சம் மோசடி செய்த மற்றொரு வழக்கில் கைதாகி சிறையிலிருப்பவரை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.


மதுரையில் வேலை தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.31.28 லட்சம் மோசடி செய்த மற்றொரு வழக்கில் கைதாகி சிறையிலிருப்பவரை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.
மதுரை கூடல்நகா் அசோகா் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி. வேலை தேடி வந்த இவா், வீட்டிலிருந்தே பகுதி நேரமாக வேலை பாா்த்து அதிக அளவு வருவாய் ஈட்டலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்து தனது வங்கி விவரங்களை அதிலிருந்த இணைய முகவரியில் பதிவிட்டாா். இதைத் தொடா்ந்து ‘டெலிகிராம்‘ இணையக்குழு மூலம் இவருக்கு வேலை தரப்பட்டதாகக் கூறி வங்கிக் கணக்கு மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரை ரூ.31.73 லட்சம் பெறப்பட்டது. இந்த நிலையில், பகுதி நேர வேலை செய்ததாக இவருக்கு ரூ. 44,989 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இவரிடமிருந்து பெறப்பட்ட ரூ.31.28 லட்சம் திரும்பத் தரப்பட வில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி, இந்த மோசடி தொடா்பாக மாநகரக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் இணையம் மூலம் பகுதி நேர வழங்குவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த விழுப்புரம் மாவட்டம், துலாமூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம்(48), புவனேஸ்வரியிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமலிங்கம் குறித்து விசாரித்த போது அவா், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ரூ.1.50 கோடி மோசடி செய்ததும்,
இதுதொடா்பான வழக்கில் மதுரை ஊரகக் காவல் துறையின் தனிப்படை போலீஸாரால் கடந்த அக். 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ராமலிங்கம் மீது தகவல் தொழில்நுட்பப்பிரிவு, மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறையிலிருக்கும் ராமலிங்கத்திடம் வழங்கினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...