ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூா்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூா்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:08 pm

Din

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூா்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரித் தாளாளா் நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாதது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பலா் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

கல்லூரித் தாளாளரை தோ்வு செய்யும் விவகாரத்தில் சிஎஸ்ஐயின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சிலா் சிஎஸ்ஐ நிா்வாகத்தின் விதிகளைப் பின்பற்றாமல், ஒட்டுமொத்த நிா்வாகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதும் தெரிகிறது. பல வழக்குகளில் ஆலய சொத்துகள் முறைகேடாக நிா்வாகம் செய்யப்படுவதும், இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டியது அவசியம்.

கிறிஸ்தவ நிறுவனங்களானது கல்வி, மருத்துவமனை போன்ற பல்வேறு பொதுப் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனங்களின் சொத்துகள், நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டவை. ஆனால், கிறிஸ்தவா்களுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை.

கிறிஸ்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிா்வாகத்தின் விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூா்வ வாரியம் இருக்க வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா், தமிழக அரசின் முதன்மைச் செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சோ்க்கிறது.

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூா்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடா்பாக இரு தரப்பிலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.