கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றும்போது நீரில் முழ்கி தொழிலாளி பலி!
மதுரை, கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு


மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்
மதுரை, செல்லூா் கண்மாய் நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரி நீா் பந்தல்குடி கால்வாயில் செல்கிறது. இதனால் இந்தக் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாண்டியராஜன்
இந்த நிலையில், கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்காக பந்தல்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாண்டியராஜன் (35) புதன்கிழமை மாலை உள்ளே இறங்கினாா். அப்போது அவா் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் அங்கு சென்று பாண்டியராஜனை தேடினா்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பந்தல்குடி பாலத்தின் கீழ்ப்பகுதியில் நீரில் மூழ்கியிருந்த பாண்டியராஜனை தீயணைப்பு வீரா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...