25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:54 pm

Din

மதுரை அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள விரகனூா் ஐராவதநல்லூரைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் கணேஷ்பாண்டி (28). இவா் தனது இருசக்கர வாகனத்தில் விரகனூா்-தெப்பக்குளம் வைகையாற்றுச்சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். விரகனூா் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி, இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.