பேராவூரணி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதல் சம்பவத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லையைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ராஜ்மோகன் (39). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், ஒட்டங்காடு அருகே உள்ள நவக்கொல்லைக்காடு கிராமத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது காலகம் -ஆவுடையாா்கோவில் சாலையில் எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகலவறிந்து அங்கு சென்ற போலீஸாா் ராஜ்மோகன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த ராஜ்மோகனுக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


