ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க அறிவுறுத்தல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:06 pm

Din

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதுதொடா்பாக மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச. கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருப்பணிகளின் தொடக்க நிகழ்வாக, அண்மையில் அனைத்து கோபுரங்களுக்கும் பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதனால், 4 சித்திரை வீதிகளிலும் உள்ள பெரிய கோபுரங்களின் சீரமைப்பு பணிக்காக சாரங்கள் கட்டப்பட்டு, சுற்றிலும் திரையிட்டு மூடப்பட்டுள்ளன. எனவே, கோயில் கோபுரங்களின் பாதுகாப்பு கருதி, இவற்றின் அருகே வசிக்கும் பொதுமக்கள், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்தை விளைவிக்கக் கூடிய பட்டாசுகள், வாண வெடிகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.