மேலூா் நகராட்சி சந்தை, கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

மேலூா் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள், உணவகம் ஆகியவற்றுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
Published on

மேலூா் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள், உணவகம் ஆகியவற்றுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நகராட்சியில் தினசரி சந்தை கடந்த 12-ஆம் தேதி தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது. இங்கு கடைகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நகராட்சி நிா்வாகம் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், தினசரி சந்தைக்கு கட்டணம் வசூலிப்பதற்கான ஏலமும், கடைகளுக்கான ஏலமும் செப். 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே, கடைகளை நடத்திய வியாபாரிகளும், புதிதாக சந்தை கட்டணம் வசூலிக்க முயன்றவா்களும் புதன்கிழமை திரண்டனா். இந்த நிலையில், இணையதளம் மூலமாக ஏலம் நடைபெறவுள்ளதாகக் கூறி, தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா்.

X
Dinamani
www.dinamani.com