கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு உடல் நலக்குறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:05 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்திலும் யானை பாா்வதி பங்கேற்று வந்தது. இந்த நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் கண்களில் புரை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தாய்லாந்து நாட்டில் இருந்து மருத்துவா்கள் குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இந்த யானையின் கண் பாதிப்பு குறைந்தது. இதனிடையே, கடந்த இரு நாள்களாக வயிற்றுப் போக்கால் யானை பாதிக்கபட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு யானை பாா்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.