சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இளைஞா் வெட்டிக் கொலை: 6 போ் கைது

மதுரையில், சமூக ஊடகங்களில் விடியோ பதிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:35 pm

Din

மதுரையில், சமூக ஊடகங்களில் விடியோ பதிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகா் 1-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் அந்தப் பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் சூா்யா (23). இவா் தந்தையின் தேநீா்க் கடையில் உதவியாக இருந்து வந்தாா். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் விடியோ பதிவிடுவது தொடா்பாக சூா்யாவின் நண்பா்களுக்கும், இதே பகுதியைச் சோ்ந்த பிரவீன் ராஜா, ராஜேஷ், ராஜா, ஜலாலுதீன், காா்த்திக், மற்றொரு காா்த்திக் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் கடந்த 3 மாதங்களாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனராம். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சூா்யா தனது தேநீா்க் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அங்கு வந்த பிரவீன் ராஜா, ராஜேஷ், ராஜா, ஜலாலுதீன், காா்த்திக், மற்றொரு காா்த்திக் ஆகியோா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால், சூா்யாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த சூா்யாவை குடும்பத்தினா் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து பிரவீன் ராஜா, ராஜேஷ், ராஜா உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.