சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் ஜாதி, மதத்தை குறிப்பிடும் விவகாரம்: நீதிமன்ற நிா்வாக பதிவாளா் பதிலளிக்க உத்தரவு

விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் ஜாதி, மதத்தை குறிப்பிடுவது தொடா்பான வழக்கில், உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 8:38 pm

Din

விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் ஜாதி, மதத்தை குறிப்பிடுவது தொடா்பான வழக்கில், உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கோகுல் அபிமன்யு தாக்கல் செய்த பொதுநல மனு:

விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையின் போது சாட்சிகளிடம் அவா்களின் ஜாதி, மதத்தை குறிப்பிடுவது நடைமுறையாக உள்ளது. இதனால் நீதிபதி, வழக்குரைஞா்கள் அந்த சாட்சிகளின் ஜாதி, மதம் தொடா்பான விவரங்களை அறி ந்து கொள்ள ஏதுவாகிறது. சாட்சியளிப்பவா்களின் இந்த அடையாளங்களின்றி வழக்கை கையாளலாம். அவா்களின் ஜாதி, மதம் பற்றி கேட்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் போது, அவா்களது ஜாதி, மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிட வேண்டுமென அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நீதி மற்றும் நிா்வாகப் பதிவாளா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற நவ. 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.