சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தாயை கொல்ல முயற்சி: மகன் கைது

மதுரை அருகே சொத்தை பிரித்த தர மறுத்த தாயை தாக்கி கொல்ல முயன்ற மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

மதுரை அருகே சொத்தை பிரித்த தர மறுத்த தாயை தாக்கி கொல்ல முயன்ற மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள தாராபட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி பாண்டியம்மாள் (65). இவரது மகன் விஜயபாண்டி (41). இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் குடும்பச் சொத்தை பிரித்துத் தருமாறு தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை தாய் வீட்டுக்குச் சென்ற விஜயபாண்டி சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டபோது இதற்கு பாண்டியம்மாள் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாண்டி அவரை ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த பாண்டியம்மாளை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா், விஜயபாண்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.