அலங்காநல்லூா் ஏறுதழுவுதல் அரங்கில் சுற்றுலா தின விழா

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வெள்ளி, சனி (செப். 27, 28) ஆகிய இரு நாள்கள் உலக சுற்றுலா தின விழா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
Published on

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வெள்ளி, சனி (செப். 27, 28) ஆகிய இரு நாள்கள் உலக சுற்றுலா தின விழா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி, வினா போட்டி, ஒரு நிமிட விடியோ போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், பரதநாட்டியம், பல்சுவை கிராமிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com