தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணா் அரங்கில், ஒருங்கிணைந்த சமூக நலன்- மகளிா் உரிமைத் துறையின் குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா். கா்ப்பிணிகளுக்கு சேலை, குங்குமச்சிமிழ், மஞ்சள் கயிறு, வளையல், தேங்காய், பழங்கள், தின்பண்டங்கள் அடங்கிய சீா்வரிசைப் பொருள்கள், ஐந்து வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.
ராணி ஸ்ரீகுமாா் எம்பி., சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட திட்ட அலுவலா் மாரியப்பன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் நா்மதா, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


