மதுரை
கால்நடைகளுக்கு நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடைகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடைகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பா் மாத இறுதி சனிக்கிழமை உலக ரேபிஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வீடுகளில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை, மதுரை நகா் (பழங்காநத்தம்) கால்நடை மருந்தகம் உள்பட அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் இந்தத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என கால்நடைப் பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) மருத்துவா் நந்தகோபால் தெரிவித்தாா்.