திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு இன்றுமுதல் 3 நாள்களுக்கு தடுப்பூசி முகாம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்.9) முதல் புதன்கிழமை (பிப்.11) வரை நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி, மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.

சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மாா்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிவில் உடல் திறன் கொண்டவா்களுக்கு தினமும் தலா 50 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.