பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தேர்தலில் பெண்களை வேட்பாளராக்க என்னதான் பிரச்னை?

ஒவ்வொரு பேரவைத் தேர்தலிலும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருப்பது ஏன் என்பது பற்றி..

News image

பெண் வாக்காளர்கள்

File photo

Updated On :28 மார்ச் 2026, 7:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது, ஒரு தகவல் மட்டும் ஒன்றுபோல உள்ளது. அதுதான் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை

ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வாக்குப் பதிவின்போதும், வாக்களித்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெண் வாக்காளர்களே அதிகமாக இருப்பார்கள்.

ஆனால், கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மட்டும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. இதற்கு முழுச் சிறந்த உதாரணமாக இருப்பது கேரளம். பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட கேரளத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இங்கு மொத்தமுள்ள வேட்பாளர்களில், பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடுவது வெறும் 50 பெண் வேட்பாளர்கள்தான். 140 தொகுதிகளில் 457 வேட்பாளர்கள் போட்டியிடும்போது, அதில் 54 பேர்தான் பெண்கள். அதாவது 10 சதவீதம்தான்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். இங்கு 1.39 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், வேட்பாளர்கள் வெறும் 10 சதவிகிதம்தான். ஒரு திருநங்கை களத்தில் உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்களின்போது பெண் வேட்பாளர்களின் கை ஓங்கியிருக்கும். கிட்டத்தட்ட 54 சதவிகித பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆனால், பேரவை என்று வரும்போது அது பின்னடைவை சந்திக்கிறது என்கிறார்கள்.

அஸ்ஸாம் மட்டும் விதிவிலக்காகுமா என்ன? அங்கும் இதே நிலைதான். 2.49 கோடி மொத்த வாக்காளர்களில் 1.24 போடிப் பேர் பெண்கள். கடந்த இரண்டு பேரவைத் தேர்தல்களிலும் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்திருந்தனர். 82 மற்றும் 84 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இது பிரதிநிதிகள் என்று வரும்போது குறைந்து வருகிறது. அங்குள்ள 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் மொத்தம் 59 பேர்தான் பெண்கள். இங்கு திருநங்கைகள் போட்டியிடவில்லை.

அதுபோல, போட்டியிடும் பெண்களும் அதிகம் வெற்றி பெறுவதில்லை என அஸ்ஸாம் தரவுகள் கூறுகின்றன. 2021ல் 76 பெண்கள் போட்டியிட்ட நிலையில் வெறும் 6 பேர்தான் தேர்வாகியிருக்கிறார்கள். 2016ல், 91 பெண்கள் போட்டியிட்டு வெறும் 8 பேர்தான் எம்எல்ஏ ஆனார்களாம். இந்த வெற்றிவாய்ப்புகளும், பெண் வேட்பாளர்களின் கதவுகளை மூடிவிடுவதாகக் கூறுகிறார்கள்.

தமிழக தரவுகள் சொல்வது என்ன? தமிழகத்தில், அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். உரிமைத்தொகை, சுய உதவிக் குழு, எரிவாயு சிலிண்டர் என்று. ஆனால், வேட்பாளர்கள் என்று வந்துவிட்டால் கட்சிகளின் மனநிலை ஏனோ மாறிவிடுகிறது.

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 1609 பெண்கள் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் வெறும் 171 பேர் மட்டுமே எம்எல்ஏவாகியிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர்தான் அமைச்சர்களாகியிருப்பார்கள். அமைச்சரே ஆனாலும், சமூக நலன், ஆதி திராவிடர் நலன் போன்ற துறைகளே ஒதுக்கப்படும். தற்போதைய பேரவையில் வெறும் 12 பெண் வேட்பாளர்கள்தான் இருக்கிறார்கள்.

வாக்குப்பதிவு குறித்து பெண் வாக்காளர்களை குறிவைத்து விழிப்புணர்கள் நடத்தப்பட்டாலும், பெண்களுக்கு வாய்ப்பளிக்கும்போது மட்டும் கட்சிகள் விழிப்புணர்வை அடைவதேயில்லை.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் 52 பெண்கள் உள்ளனர். மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29, 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மற்ற கட்சிகளைக் காட்டிலும் திரிணமூல் காங்கிரஸ் பெண்களுக்கு கணிசமான வாய்ப்புகளை வழங்கி வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் தேர்வான எம்பிக்களில் 38 சதவிகிதம் பேர் பெண்கள். இந்த முறை, திரிணமூல் வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 70 எம்எல்எக்களில் மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.