ஆண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், வட தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 120 தேர்தல் வாக்குறுதிகளை அமமுக வெளியிட்டுள்ளது.
அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை, கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.
அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், 120 வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அதில், விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை.
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பயிர்கள் பாதிக்கப்பட்டால் 30 நாள்களுக்குள் இழப்பீடு.
கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை.
அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்டணங்கள் ரத்து.
வட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை.
மாதம் ஒரு முறை மின் கணக்கீடு முறையும், மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும் வழங்க நடவடிக்கை.
மின் வாகனங்களுக்கான மானியம் அதிகரிப்பு.
சொத்துவரி உள்ளிட்ட கட்டணங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகள் நீக்கப்படும்.
காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3000 உதவித் தொகை.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை.
திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன்.
ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவர்களுக்குத் தேவையான நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
Summary
The AMMK has released 120 election promises, including self-help groups for men and an AIIMS hospital for North Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்!

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு!

ஆண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள்! அமமுக தேர்தல் அறிக்கை!!

தமிழக சட்டமன்றத் தேர்தல்; அமமுக போட்டியிடும் இடங்கள்! | ADMK | AMMK | EPS
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


