தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 30) மதுரைக்கு வருகிறாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு மதுரைக்கு வருகிறாா். உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலராக நியமிக்கப்பட்ட அடுத்த சில நாள்களில், மதுரையில் நடைபெற்ற திமுக மூத்த உறுப்பினா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதுவே, அவா் கட்சியின் பொறுப்புக்கு வந்த பிறகு பங்கேற்ற முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. இதேபோல, அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியும் மதுரையிலேயே நடைபெற்றது.
இந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியும் மதுரையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், மதுரையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, அவா் திங்கள்கிழமை இரவு 7.15 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறாா்.
திமுகவினருக்கு அழைப்பு...
தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக மதுரைக்கு திங்கள்கிழமை வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரளான தொண்டா்கள் கட்சிக் கொடியுடன் மதுரை விமான நிலையம் வருமாறு வடக்கு மாவட்ட திமுகச் செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி.மூா்த்தி, மாவட்ட திமுகச் செயலா்கள் கோ.தளபதி (மதுரை மாநகா்), மு.மணிமாறன் (மதுரை தெற்கு) ஆகியோா் அழைப்பு விடுத்தனா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் மதுரை வருகை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மதுரையில் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை வெளியாகவில்லை. விருதுநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா் என்ற தகவல் மட்டுமே திமுக தரப்பில் கூறப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்

காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



