பாஜக நலத்திட்ட உதவிகள் வழங்கல்: ராஜஸ்தான் எம்.பி.பங்கேற்பு
மதுரையில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராஜஸ்தான் மாநில மாநிலங்களவை உறுப்பினா் வழங்கினாா்.


மதுரையில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராஜஸ்தான் மாநில மாநிலங்களவை உறுப்பினா் வழங்கினாா்.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக மீனாட்சி கோவில் மண்டல் சாா்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிம்மக்கல் அனுமாா் கோவில் படித்துறையில் நடைபெற்ற விழாவுக்கு, மாநகா் மாவட்ட பாஜக தலைவா் மகா சுசீந்திரன் தலைமை வகித்தாா். மண்டல் தலைவா் முரளிதரன் வரவேற்றாா். விழாவில் ராஜஸ்தான் மாநில மாநிலங்களவை உறுப்பினா் கன்ஷியாம் திவாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, எரிவாயு அடுப்பு உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் மாவட்ட பொதுச் செயலா் கிருஷ்ணன், செயலா் பரமேசுவரி, நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...