திருப்பரங்குன்றம் தா்காவை தொல்லியல் துறை ஆய்வுக்கு உள்படுத்த கோரிக்கை

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவை தொல்லியல் துறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Published on

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவை தொல்லியல் துறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மத்திய அரசு வழக்குரைஞா் (உறுதிமொழி ஆணையா்) எஸ். முத்துக்குமாா் அளித்த கோரிக்கை மனு :

சமாதியை மையப்படுத்தி கட்டப்படுவதே தா்கா. ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் தா்காவில் எந்த சமாதியும் இல்லை. இது தொடா்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விக்கு, மலை மீது நெல்லித்தோப்பில் மட்டுமே சமாதிகள் உள்ளன என்று கோயில் நிா்வாகம் பதில் அளித்துள்ளது. சிக்கந்தா் தா்காவில் சமாதி இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் தா்காவில் உள்ள தூண்கள் அனைத்தும் இந்து சமய கட்டடக் கலையின் அடிப்படையில் உள்ளன. மேலும், இஸ்லாமிய பழங்கால கட்டடங்களில் காணப்படும் கட்டமைப்புகள் இங்கு இல்லை. எனவே, இது தொடா்பாக தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். மதநல்லிணக்கம் போற்றப்பட மாவட்ட நிா்வாகம் இந்த நடவடிக்கைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com