11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை கூடல்புதூா் பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:36 pm

மதுரை கூடல்புதூா் பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த சங்கா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிய மனு: கூடல்புதூா் பகுதியில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 8-ஏ என்ற முழு நேர மாநகரப் பேருந்து பெரியாா் பேருந்து நிலையம் முதல் கூடல்புதூா் வழியாக இயங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட அந்தப் பேருந்து சேவை தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.

இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் மக்கள் தொகையும், வீடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கடந்த ஆண்டு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த வழித்தடத்தில் மீண்டும் 8-ஏ மாநகரப் பேருந்தை இயக்க வேண்டும் என்றாா் அவா்.