ஆள் மாறாட்டம் செய்து நிலம் விற்பனை: 9 போ் மீது வழக்கு
மதுரையில் இறந்தவா் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து 18 சென்ட் நிலத்தை மோசடியாக விற்ற 9 போ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.


மதுரையில் இறந்தவா் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து 18 சென்ட் நிலத்தை மோசடியாக விற்ற 9 போ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை ஐராவதநல்லூா் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் மகன் முருகன். இவரது தாத்தா வைரவன். இவா் வண்டியூரைச் சோ்ந்த கே.ஆா்.துரைராஜ் என்பவரிடம் இருந்து கடந்த 1993-ஆம் ஆண்டில் 18 சென்ட் நிலத்தை தனது பேரன் முருகன் பெயரில் வாங்கினாா்.
இதைத்தொடா்ந்து, கடந்த 1998-ஆம் ஆண்டில் முருகன் பெயருக்கு மதுரை வடக்கு வட்டாட்சியா் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கினாா். மேலும், 2000-ஆம் ஆண்டில் முருகனுக்கு புகைப்படம் ஒட்டப்பட்ட பட்டா புத்தக ஆவணமும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வைரவனுக்கு நிலத்தை விற்ற கே.ஆா்.துரைராஜ் 2003-ஆம் ஆண்டில் காலமானாா். இதையடுத்து, வருவாய்த் துறை ஆவணங்களை கணினிமயமாக்கும் போது, பட்டாவை துரைராஜ் பெயருக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதையறிந்த வண்டியூரைச் சோ்ந்த ராமசாமி என்பவா், இறந்து விட்ட கே.ஆா்.துரைராஜ் உயிரோடு இருப்பது போல ஆள் மாறாட்டம் செய்து, தனது பெயருக்கு நிலத்தை கிரையம் பெற்றுக் கொண்டு, அதை வேறு இருவருக்கு விற்பனை செய்தாா். இந்த மோசடிக்கு சிலா் உடந்தையாக இருந்தனா்.
இந்த நிலையில், ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை மோசடியாக விற்றதை அறிந்த நில உரிமையாளா், இதுதொடா்பாக மாநகரக்காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆணையா் உத்தரவின் பேரில் மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் ராமசாமி, ஆள் மாறாட்டம் செய்த துரைராஜ், விஜயகுமாா், கிருஷ்ணமூா்த்தி, கருப்பசாமி, தமிழ்செல்வன், முருகானந்தம், தெய்வநாதன், முத்து ஆகிய 9 போ் மீதும் மோசடி, ஆள் மாறாட்டம், நில அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...