கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் 2023ல் பெண்களிடையே நிகழ்ந்த தற்கொலைகளில் 40% இல்லத்தரசிகள்!

2023 ஆம் ஆண்டில் தேசிய தலைநகரில் நடந்த பெண் தற்கொலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திருமணமான பெண்கள்..
Published on

2023 ஆம் ஆண்டில் தேசிய தலைநகரில் நடந்த பெண் தற்கொலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திருமணமான பெண்கள், இறப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை இல்லத்தரசிகள் என்று தில்லி அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

2023 ஆம் ஆண்டில், நகரில் பதிவு செய்யப்பட்ட 836 பெண் தற்கொலை இறப்புகளில், 455 (54.43 சதவீதம்) திருமணமான பெண்கள். மொத்த பெண் இறப்புகளில் 369 இல்லத்தரசிகள், அல்லது 44.13 சதவீதம் என்று தரவு காட்டுகிறது.

தொற்றுநோய் காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் நீண்டகால வீட்டு அடைப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட தொற்றுநோய் காலம் உள்பட, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் போக்கு சீராக உள்ளது.

2022 ஆம் ஆண்டில், 859 பெண் தற்கொலை இறப்புகளில் 521 திருமணமான பெண்கள், 60.65 சதவீதம், இல்லத்தரசிகள் 387 இறப்புகள் அல்லது 45.05 சதவீதம். 2021 ஆம் ஆண்டில் கோவிட் இரண்டாம் அலையால் கணிசமாக பாதிக்கப்பட்ட ஆண்டு தற்கொலை செய்து கொண்ட 746 பெண்களில் 421 போ் திருமணமானவா்கள் 56.43 சதவீதம் மற்றும் 351 போ் இல்லத்தரசிகள் 47.05 சதவீதம்.

இதேபோல், 2020 ஆம் ஆண்டில், நீண்ட காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டபோது, 895 பெண் தற்கொலை இறப்புகளில் 542 போ் திருமணமான பெண்கள் 60.56 சதவீதம், அதே நேரத்தில் 410 போ் இல்லத்தரசிகள் 45.81 சதவீதம்.

2019 ஆம் ஆண்டில், தொற்றுநோய்க்கு முன்பு, 768 பெண் தற்கொலை இறப்புகளில் 400 போ் திருமணமான பெண்கள் 52.08 சதவீதம் மற்றும் 305 போ் இல்லத்தரசிகள் 39.71 சதவீதம்.

ஒட்டுமொத்தமாக, தில்லியில் தற்கொலை நிகழ்வு பெண்களை விட ஆண்களிடையே தொடா்ந்து அதிகமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில், நகரில் பதிவான மொத்த 3,131 தற்கொலை இறப்புகளில், 2,295 போ் ஆண்கள் மற்றும் 836 போ் பெண்கள். 2022 ஆம் ஆண்டில், மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 3,417 ஆக இருந்தது, இதில் 2,558 ஆண்கள் மற்றும் 859 பெண்கள் அடங்குவா்.

2019 மற்றும் 2023 க்கு இடையில், பெண்களில் தற்கொலை செய்து கொண்டவா்களில் அதிக எண்ணிக்கையிலானோா் இல்லத்தரசிகள் மற்றும் திருமணமான பெண்கள் பிரிவுகளில் உள்ளனா் என்றும், ஆண்களில், வேலையில்லாதவா்கள் மற்றும் திருமணமான ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் தரவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது, இது பொருளாதார மற்றும் குடும்பம் தொடா்பான அழுத்தங்களின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com