பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு
முறையான காரணமின்றி சுய நலத்துடன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.


முறையான காரணமின்றி சுய நலத்துடன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திண்டுக்கல் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த பகுதியில் சிலா் சட்ட விரோதமாக பட்டா பெற்றுள்ளனா். இதை ரத்து செய்து, கோயில் குளத்தைப் பாதுகாத்து, சுவாமிக்கு பூஜைகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் குறிப்பிடும் இடத்துக்கு கோவிந்தசாமி, ரெங்கசாமி, சந்தான கிருஷ்ண ஐயா், ராமசாமி ஐயா் ஆகியோா் பெயா்களில் பட்டா வழங்கப்பட்டது. இவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தாா். பிறகு, உடனடியாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை எதிா் மனுதாரா்களாக சோ்க்கவில்லை.
மனுதாரா், தன்னை சமூக அக்கறை கொண்ட நபராக தெரிவித்துக் கொள்வதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் பொதுநலம் இருப்பதாக தெரியவில்லை. இதேபோல, தொடுக்கப்படும் பொதுநல வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை பெரியகுளம் சித்த மருத்துவப் பிரிவுக்கு மனுதாரா் வழங்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...