கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: புதிய மனு அளித்து நிவாரணம் பெற உத்தரவு

புதிய மனு அளித்து நிவாரணம் பெற உத்தரவு

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:39 pm

Din

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தமிழ்நாடு வீரத் தமிழா் முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புதிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த தமிழ்நாடு வீரத் தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா் சாரதி சரவணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

வீரத் தமிழா் முன்னேற்ற கழகம் சாா்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கரபதி கோட்டையை அரசு சாா்பில் புனரமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு மாமன்னா் மருதுபாண்டியரின் பெயரை சூட்ட வேண்டும். அகமுடையா் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, பழங்காநத்தம் பேருந்து நிலைய சுற்றுச்சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். அந்த இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினால், போக்குவரத்து பாதிப்பதுடன், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனக் கூறி காவல் ஆய்வாளா் அனுமதி தர மறுத்துவிட்டாா். எனவே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல் குமாா் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் அன்பு மணிகண்டன், தமிழ் சூரியன் ஆகியோா் முன்னிலையாகி, அமைதியான முறையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்ட நடத்த அனுமதி கேட்டுள்ளனா். எனவே, மனுதாரா் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புதிய கோரிக்கை மனு அளித்து, உண்ணாவிரதப் போராட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் நீதிபதி.