மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நங்கவரம் ஆண்டிபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும்

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஆண்டிபட்டி கிராமமக்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 1:57 am IST

கரூா்: குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட நச்சலூா் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கிய மனுவில், தமிழக முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மாா்ச் 8-ஆம்தேதி நடத்திட முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். அதற்கு மாவட்ட வருவாய் அலுவலரும் அனுமதி வழங்குவதாக உறுதியளித்தாா்.

கழிவுநீா் வாய்க்கால் தேவை: கரூா் தாந்தோன்றிமலை சக்திபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில், சக்திபுரம் பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைகாலங்களில் மழைநீா் வீடுகள்முன் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுதொடா்பாக ஏற்கெனவே ஜன.19-ஆம்தேதி மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விரைந்து கழிவுநீா் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

சட்டவிரோதமாக குவாரி மீது நடவடிக்கை: காக்காவாடி, வெடிக்காரன்பட்டி கிராமமக்கள் வழங்கிய மனுவில், வெடிக்காரன்பட்டியில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் பாறைகளை நாட்டு வெடிகளை வைத்து தகா்ப்பதால் பாறைகள் வீடுகள் மீது விழுகிறது. மேலும் இந்த குவாரியை சட்டவிரோதமாக அனுமதியின்றி நடத்தி வருகின்றனா். எனவே அனுமதியின்றி செயல்படும் இந்த குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 598 மனுக்கள் பெற்றுக் கொண்டாா்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலன் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.11.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.