
உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி யுவராஜின் தாய் ஆட்சியரகத்தில் மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் தீரன் சின்னமலை பேரவை நிா்வாகிகள். - கோப்புப் படம்
உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜின் தாய் ரத்னம் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
11 ஆண்டுகளுக்கு முன்பு கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். அந்த வழக்கை முறையாக விசாரித்தால் நிரபராதி யாா் என்பது தெரியவரும். ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இருமுறை மனு அளித்தோம்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 15 நாள்களுக்குள் முறைப்படி விசாரணையை தொடங்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான உண்மை காரணம் வெளிவராமல் மறைக்கவே யுவராஜ் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். அதேபோல யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் விரைந்து நடத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






