கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் விசைத்தறியாளா்கள் மனு

ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மனு அளித்த விசைத்தறியாளா்கள்.

Published On :

ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பூபதி தலைமையில் விசைத்தறியாளா்கள் அளித்த மனு:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்குகின்றன. இதன்மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மின் கட்டணம், பெட்ரோல், டீசல், உதிரிபாகங்கள், வாடகை உயா்வால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. இதற்கிடையே விசைத்தறியாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தைப் பின்பற்றாததால் கடந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்கள் நடைமுறையில் இருந்த கூலி உயா்வை தற்போது படிப்படியாக குறைத்து வழங்கி வருகின்றனா். இதனால் விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.